காப்பது விரதம்.

ஆத்திசூடி நீதிகதைகள்

33.காப்பது விரதம்.

காப்பது - உனக்குள்ள நல்லொழுக்கங்களை நிலைக்கச் செய்தல், விரதம் - உடற்காப்பேயாம்.

தான் செய்யத்தொடங்கிய தருமத்தை விடாமல்செய்வதே விரதமாகும் (அல்லது) பிறஉயிர்களுக்கு துன்பம் செய்யாமல்அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்

அதாவது ஒவ்வோர் மனிதனும் உலகத்தில் சுகமாக வாழ வேண்டுமாயின்
தேகக்காப்பு,
வாக்குக் காப்பு,
மனோகாப்புன்னும்

தன் தேகத்தால் மற்றய சீவராசிகளுக்குத் துன்பஞ் செய்யாமற் காப்பதும்,

தன் வாக்கினால் மற்றோரை மனநோகப் பேசுதலும்,

தீங்குண்டு செய்தலு மாகியச் சொற்களைச் சொல்லாது காப்பதும்

தன் மனதில் மற்றவர்களுக்குத் தீங்கு விளையக்கூடிய வண்ணங்களை எண்ணாமலும்,

உள்ளத்திற்கபடு சூது வஞ்சினமிவைகளையணுக

விடாமலுங்காப்பதும் விரதமென்னப்படும்.

அனைவரும் அறிந்த கதை..

கர்ணனின் கதை
கர்ணன்
இறுதிவரை கொடை தன்மை கொண்ட மனம் மாறாதவன்..

அடுத்து

அரிசந்திரன் கதை

இறுதி வரை வாய்மையலனாகவே இருந்தார்.

Comments