அனந்தல் ஆடேல்

ஆத்திசூடி நீதிகதைகள்

31. அனந்தல் ஆடேல்

இன்று கதை இல்லை

அதிக தூக்கம் கேடு விளைவிக்கும்..

அதிக நேரம் தூங்குவதும் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தூக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு அவசியம். குழந்தைகள் வளரும் பருவத்தில் இருப்பதால், அவற்றிற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 10 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. மனிதன் முழு வளர்ச்சி அடைந்த பிறகு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெரியவர்கள், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் தூங்கும் போது சில பிரச்சனைகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அதிக தூக்கமும் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. சமீபத்தில் மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் மன அழுத்தத்திற்கு ஆளானவர்களில் 50 சதவிகிதம் பேர் 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் என தெரியவந்துள்ளது. அதிக தூக்கம் மூளையின் சுறுசுறுப்புத் தன்மையையும், செயல்பாட்டையும் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பெண்களில் ஒன்பது மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதிகமான தூக்கத்தால், ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய் சுழற்சி போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டு மலட்டுத் தன்மை உண்டாவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதே நேரம், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கும் பெண்களிடம் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

அளவுக்கு அதிகமான தூக்கம், உடல் எடையையும் அதிகரிக்கிறது. இரவில் 10 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களிடம் உடல் எடை பிரச்சனை அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் கூட அதிக தூக்கத்தால் உடல் பருமன் ஆவது தடுக்கப்பட முடியாமல் போகிறது.

மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 3000 பேருக்கு மேல் நடந்த ஆய்வில், இரவில் நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இரு மடங்கு இருப்பதாகத் தெரிகிறது

மேலும்.
நமது பட்டுகோட்டை கல்யணசுந்தரம் அவர்கள் அழகான பாடலில் நமக்கும் விளக்கி உள்ளார்

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்

மேலும்..

அதிஷ்டத்தை நம்பி தூக்கியவர்களுக்கு

சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்

மேலும் எங்கு எல்லாம் தூங்க கூடாது
தூங்கினால் என்னவெல்லாம் இழப்பிர்கள் என்பதை கூட அழகான தன் வரிகளில் விளக்கி உள்ளார்..

ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

என தூக்கத்தின் விளைவை பறைசாற்றுகிறார்.

Comments