இடம்பட வீடு எடேல்

ஆத்திச்சூடி நீதிக்கதைகள்

18. இடம்பட வீடு எடேல்

உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே

ஆடம்பர ஆசைகளுக்கு இடந் தராதே. தேவைகளை சுருக்கி வாழப் பழகுக

தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது நம் வீட்டுக்கும் பொருந்தும். வீட்டைக் கட்டிப் பார் & கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். சுப விரயமான வீடு ஒரு வகையில் சேமிப்பு என்றாலும், அகலக்கால் வைக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. கை மீறி கடன் படாமல் தேவையான் அளவுக்கு கட்டிக் கொள்வது மிகவும் நல்லது. கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன். அந்த நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார்.அவரும் அவர் மனைவி மட்டும் வசித்து வந்தனர்.அவருக்கு ஆசை பிறந்தது. ஊரிலேயே தனது வீடி மட்டும் தான் பெரியதாக இருக்கவேண்டும். என சிந்தையில் மிகுந்த பொருட்செலவில் பெரிய வீடு கட்டினார்.
இருவர் மட்டுமே என்பதால் பல அறைகள் பூட்டியே கிடைந்தது.
அதனால் விஷ ஜந்துகள் குடி பெற ஆரம்பித்தது.

ஒரு அறையில் எறும்புகள் பல நூறு முட்டைகள் வைத்தன.
அதோடு பற்றும் கரையான் பற்றுகளும் ஓங்கி வளர ஆரம்பித்தது.

மேலும் பாம்பு குடியேறியது.

அதோடு கோட்டான்களும் ஆந்தைகளும்
குடியேறியது..

இறுதியாக அவரும் மனைவியும் பெரிய வீட்டை விட்டு பழைய வீட்டிலேயே குடியேறினர்..

Comments