சனி நீராடு

#ஆத்திச்சூடி_நீதிகதைகள்

16.சனி நீராடு..
இது மிகவும் முக்கியமான பதிவு . ஆதலால் ஆங்கிலத்திலும் இந்த பதிவு இடம் பெரும்...

சனி நீராடு? ஏன்?, எதற்கு?

சனி நீராடு!, தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் தொட்டுத் தொடரும் ஒரு வாசகம். நம்மைப் போல உஷ்ணமான சீதோஷ்ன நிலை பகுதியில் வாழ்வோருக்கு தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள் சொல்வதை, என்றைக்கோ நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இதன் பின்னால் இருக்கும் அநேக விஷயங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் படாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த வகையில் குறிப்பாக "புதன், சனி நீராடு" என்பது பிரபலமான சொல்லாடல், ஏன் புதன் சனி நீராடு என்கிறார்கள்?

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

"கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்
கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்
பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்
பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்
தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்
தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்
நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க
நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."

- தேரையர் -

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

இவற்றை அனுபவமோ அல்லது ஆராய்வோ இல்லாமல் எழுதியிருக்க முடியாது. இவற்றின் பின்னால் இருக்கும் சூட்சுமங்களும், அறிவியல் நுட்பங்கள் இன்னமும் ஆராயப் பட வேண்டியுள்ளது.

Maxim # 16: சனி நீராடு -- Take a special shower on Saturdays.

ஆத்திச்சூடி # 16: சனி நீராடு (sa-ni nEE-rAA-du)

Translation: Take a special shower on Saturdays.

Rumination: The term "சனி" means "Saturday" and "நீராடு" means "take bath." Literally, this maxim underscores the importance of taking special bath on Saturdays. For many, special bath may mean an oil-bath or a head-bath. Auvaiyar's penchant for cleanliness is amply evident in this maxim. A good shower not only relieves stress but can also provide ample opportunities for ruminating new ideas. Quality time at the showers is a luxury during weekdays. Hence the maxim's reference to Saturdays. And celebrate the coincidence of today being a Saturday as well.

Quotes: It is the height of luxury to sit in a hot bath and read about little birds. -- Lord Alfred Tennyson.

Comments