அஃகஞ் சுருக்கேல்

ஆத்திச்சூடி நீதிகதைகள்

அஃகஞ் சுருக்கேல்

சென்னை பட்டணத்தில் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஏலேலசிங்கன் என்னும் மாணவன் இருந்தார் . அவருக்கு வணிக ஜாதி ,வர்த்தகம் ஜீவனம் . ஒரு சமயம் அவன் அதிகமான தானியங்களை மொத்தமாக வாங்கி வீட்டில் கட்டி பத்திரப்படுத்தி வைத்து இருந்தான் . சில நாட்களில் காட்டில் மழை இல்லாது பஞ்சம் நாடு முழுவதும் பரவியது.மக்கள் கையில் பணத்தை வைத்து கொண்டு தானியம் இல்லாமல் தவித்தனர் . இதை அறிந்த திருவள்ளுவர் தன் மாணக்கன் ஏலேலசிங்கனை அழைத்து உன்னிடம் இருக்கும் தானியங்களை தற்போது உள்ள விலையைவிட  அரைபங்கு விலை அதிகம் வைத்து விற்கச் சொன்னார் . அவரும் தன் குருவின் கட்டளைப்படி விற்றார்   . அவரின் தானியகுவியல் சிறுதும் குறைய வில்லை .
காலம் செல்ல செல்ல நெற்குவியல் அப்படியே இருந்தது .
அவன் தன் கையும் சலித்துப்போனது . மழை பெய்து பஞ்சம் விலகியும் நெற்குவியல் பெருக தான் செய்ததே தவிர குறைய வில்லை .
இப்போது அவர் ' நீ விற்பனை செய்யும் விலையில் கால்பங்கு குறைத்து கொடு' என்றார் . ஏலேலசிங்கனும் அவ்வண்ணமே செய்தார். நெற்குவியலின் அளவு குறைய ஆரம்பித்தது .

இதிலிருந்து தானிய விலையை அதிகப்படுத்தி அளப்பதால் வளர்ச்சியும் குறைத்து கொடுப்பதால் நாசமும் உண்டாகிறது என தெரிகிறது அல்லவா ..  !?

அஃகஞ் சுருக்கேல்
தானியத்தின் விலை எப்போது அடிமட்ட விலைக்கு செல்கிறதோ

அப்போது நாட்டில்
தானியத்தின் மதிப்பு இழந்து
அதன் உற்பத்தி குறைந்து
மக்கள் பசி பட்டினியால் பஞ்சத்தில் வீழுவார்கள்

இது திருவள்ளுவர் சரித்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை

Comments